எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.
செங்கல்பட்டு காட்டாங் கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள், தமிழ் ஆய்வாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர்க்கும், சீரிய தமிழ்ப்பணியாற்றும் தமிழ் இதழ் மற்றும் தமிழ் சங்கத்திற்கும் விருதுகளை வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில்,
பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப்பேராய புரவலருமான பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தமிழ் அறிஞர்கள் பன்னிரெண்டு பேருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத் தொகையினை வழங்கினர். மனிதர்களின் அடையாளமாக அவர்களின் மொழியும், இனமும் உள்ளது.
உலகிலுள்ள 6000 மொழிகளில் 6 மொழிகள் மட்டுமே செம்மொழியாக விளங்குகிறது.
அதில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் இந்தியாவின் பெருமையென்றும்
இதில் சமஸ்கிருதம் தற்பொழுது வழக்கில் இல்லாமல் அது இறந்த மொழியாகிவிட்டது.
அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பாஜக பலகொடி ரூபாய் செலவிட்டு வருவதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மேலும் தமிழ் கீழமை நீதிமன்றங்களில் மட்டுமே வாதாடும் மொழியாக தமிழ் மொழி உள்ளது.
வட இந்திய மாகாணங்களில் அவர்களின் தாய்மொழியில் வாதாடும் நிலை இன்று வரை நீடித்து வருகிறது.
தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் தமிழ் பேசுவதை கேவலமாக நினைப்பதால் தமிழ் மெல்ல மெல்ல அழிந்து வரும் சூழல் உள்ளதாக தெரிவித்த அவர்…இதனை மீட்டெடுக்கும் விதமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை தலைமை தாங்கி நடத்திவரும் பாரிவேந்தர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.