ஏக்கருக்கு ரூ.35,000/- கோரி டெல்டா மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மறியல்.

தழிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு அவசர கூட்டம் கும்பகோணத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் பங்கேற்று தீர்மானங்கள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் எம்.வெங்கடேசன், ஜி.கல்யாணசுந்தரம், எஸ்.பரமசிவம், மு.கனகராஜ், எம்.கல்யாணசுந்தரம், எஸ்.கார்த்தி உள்ளிட்ட மாவட்ட முன்னனி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அறுவடை தொடங்கிய நிலையில் எதிர்பாரா மழையினால் அழிவிற்குள்ளான சம்பா தாளடி நெல் பயிர் இழப்பிற்கு முழு காப்பீடு திட்ட இழப்பீடு மற்றும்
மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் வழங்க கோரியும், உளுந்து, பச்சைபயிறு, பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட தானியப்பயிர்கள் பாதிப்பிற்கு உரிய அளவு நிவாரணம் வழங்க கோரியும்,
மழையால் காற்றின் ஈரம் அதிகரித்துள்ள நிலையில் அரசு கொள்முதலில் ஈரப்பதம் 22 சதம்வரை அனுமதித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்திட கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் நடைபெற்ற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக வருகிற 18ந்தேதி அன்று பூதலூர், திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.