ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது – ரூபாய் 9,000/- மதிப்புள்ள செல்போன் மீட்பு.
ஆத்தூர் முக்காணி சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் கருப்பசாமி (19) என்பவர் கடந்த 15.03.2023 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் to தூத்துக்குடி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு பெயிண்ட் கம்பெனி அருகே தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவசகாயம் மகன் மதிஷ் (30), பட்டுராஜ் மகன் தங்க அய்யப்பன் (30) மற்றும் பழையகாரன் மகன் மாரிமுத்து (36) ஆகிய 3 பேர் சேர்ந்து மேற்படி கருப்பசாமியிடமிருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மேரி ஜெமிதா வழக்குபதிவு செய்து எதிரிகளான மதிஷ், தங்க அய்யப்பன் மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 9,000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார்.