ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.இராஜேந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கதேந்திரகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அரசியல்ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.ஏலகிரிமலை ஊராட்சிஏலகிரிமலை சுற்றுலா தளம்ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்