ஏலக்காய் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் இன்று மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டியல் நேரில் ஆய்வு.
செய்தியாளர் : மு.பிரதீப்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏலக்காய் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் இன்று மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டியல் நேரில் ஆய்வு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஏலக்காய் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் இன்று மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டியல் நேரில் ஆய்வு செய்தார். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உடன் இருந்தனர்.
இந்த நிறுவனம் மத்திய பதப்படுத்துதல் துறை திட்ட நிதி கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய இணை அமைச்சர் இந்த நிறுவனத்தில் பதப்படுத்துதல் முறை தரம் பிரிக்கும் முறை மற்றும் பக்குவப்படுத்துதல் முறை பற்றி நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் ஏலக்காயை இயந்திரம் மூலம் தரம் பிரிக்கும் முறையையும் பாக்கெட் போடும் முறையையும் நேரில் கண்டார் ஏலக்காய் உற்பத்தி திறனை மேம்படுத்துவதிலும் ஏற்றுமதி செய்வதிலும் மத்திய அரசு உறுதுணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.