ஐந்தாயிரம் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் பொதுமக்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்து கூறி வழங்கினார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் எங்கும் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், விவசாயிகள் கார்த்திகை மாதத்தில் நெல் விதைத்து மார்கழி இறுதி வாரத்தில் அறுவடை செய்து கொண்டு வந்த புது நெல்லை பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படையல் இட்டும் , உழவுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளை சிறப்பிக்கும் வகையில் பொங்கல்களை அளித்து மரியாதை செலுத்தி கொண்டாடுவது வழக்கம்.
கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான முறையில் பொங்கல் பண்டிகை கொண்டாடாத நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பச்சரிசி, முழு நீள கரும்பு மற்றும் ரொக்கம் ஆயிரமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் இன்று குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் தமிழக முழுவதும் இன்று காலை முதல் நியாய விலை கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், சிறுனைபெருகல், கீழம்பி, கூரம், தாமல் , முட்டவாக்கம், சிறு காவேரிப்பாக்கம் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள நியாய விலை கடைகளில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அரசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசினை வழங்கி தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகனா இளஞ்செழியன், வளர்மதி மனோகரன், முட்டவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை சுரேஷ் பாபு , தாமல் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன் , திமுக கிளைச் செயலாளர் பாஸ்கர், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.