ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து உயிர் சேதம் இல்லை

கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட 15 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு பழனிக்கு சென்றுகொண்டிருந்தபோது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழங்கனூத்து பிரிவில் சென்ற போது நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி வளைவில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது பக்கவாட்டுப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதமும் ஏற்படவில்லை
வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ஒருவருக்கு கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது .

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காயம் பட்டவர்களை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இச் சம்பவத்தால் சிறிது நேரம் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது
CATEGORIES திண்டுக்கல்
TAGS ஐயப்ப பக்தர்கள்ஒட்டன்சத்திரம்சாலை விபத்துதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்பழங்கனூத்துமுக்கிய செய்திகள்
