ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் மற்றும் அன்னை தெரசா இன்ஸ்டியூட் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நெல்லை டவுண் 15 வது வார்டு ரெங்கநாதபுரத்தில் ஊரில் நடைபெற்றது,இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.
இதில் கண் ஒளி பரிசோதனையாளர்கள் இசக்கிராஜா,கங்கா,முத்துலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்,இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனையின் போது கண்ணில் பிரச்சனை என்றால் கண்ணாடி அணியவும் சிலருக்கு மேல் சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த முகாமில் 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஜய் மற்றும தமிழர் விடுதலை களம் மாவட்ட செயலாளர் முத்துகுமார்,மண்டல செயலாளர் நெல்லை சரண் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்,முகாமினை ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
CATEGORIES Uncategorized