BREAKING NEWS

ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம்

ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம்

ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை அப்புரப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள நவாலூற்று கிராமத்தில் சாலையூர் நால்ரோடு – இடையக்கோட்டை சாலையில் பழமை வாய்ந்த கன்னிமார் கோவில் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரங்கள் உள்ளது.

கடந்த வாரம் இரவு நேரத்தில் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தபோது ஒரு ஆலமரம் மட்டும் வேறோடு சாலையின் பின்பக்கம் சாய்ந்தது.

 

இதில் குடிநீர் சின்டேக்ஸ் தொட்டி மற்றும் அருகே உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் சேதமடைந்து. பகல் நேரத்தில் விழுந்திருந்தால் அருகே ரேசன் கடை மற்றும் கால்நடை மருத்தகத்து வந்தவர்கள் விழுந்து இருக்கலாம் அதே போல வாகனங்கள் வரும்போது விழுந்திருந்தால் உயிர் சேதம் ஏற்ப்பட்டிருக்கலாம். அதிஷ்டவசமாக அதுபோல சம்பவம் நடக்கவில்லை.

ஊராட்சி நிர்வாகத்தினர் அல்லது நெடுஞ்சாலைத்துறையினர் உடன் தலையிட்டு வேறோடு சாய்ந்துள்ள மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS