BREAKING NEWS

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

 

திருப்பூர்,

நாடு முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை ரத்து செய்ய கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 

 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முற்படுகிறது.

 

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது இந்தி மொழி படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி இந்தியா முழுவதும் இந்தி கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த பாஜக அரசு முற்படுகிறது.

 

 

என்று குற்றம் சாட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக குமரன் நினைவகம் முன்பு பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )