ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது!!! மோடி அவர்கள் முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என உறுதிமொழி அளித்து ஆட்சிக்கு வந்து 8ஆண்டுகள் கடந்த பின்பும் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. இதுவரை 16 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கவேண்டும் ஆனால் நிறைவேற்ற வில்லை. மோடி அரசின் தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் ஆண்டிற்கு2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், பத்தாண்டு களுக்கும் மேலாக ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை முழுமையாக பறிக்கப் பட்டுள்ளது.

வங்கித் துறை ,மின்சாரத் துறை, தொலைதொடர்பு, இன்ஷூரன்ஸ், நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கள், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், ராணுவ தளவாட உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டில் இளைஞர்கள் முழுமையாக புறக்கணிக்கப் பட்டுள்ளது,தமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டுள்ள நிவைமைகளை கண்டித்தும்,
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் 90 சத வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் , எங்கே எனது வேலை என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரயிலடி முன்பாக இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மருத்துவர் ச. சுதந்திரபாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களுக்கு தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஒன்றிய , மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 ஆக திருத்தப்பட்டது.

மீண்டும் 58 வயதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் , தனியார் துறைகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் , பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், சிறு மற்றும் குறு தொழில்கள் துவங்க இளைஞர்களுக்கு நிர்ப்பந்தம் இன்றி வட்டியில்லா கடன் வழங்கப் படவேண்டும், பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், வேலை இல்லாத காலத்தில் இளைஞர்களுக்கு வாழ்வூதிய தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அனைத்திந்திய மாணவர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் காரல்மார்க்ஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார், ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் ஆர்.பிரபாகரன், ரா.கண்ணதாசன், வி.வாசன், ஆர்.பி. கருப்பையன், பி.வீரமணி , என்.அரங்கசாமி, சு.பால்பாண்டி , ஜெ.பிரதீப், க. சரவணன், எஸ்.சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
