BREAKING NEWS

ஒன்றிய அரசை கண்டித்து தேனி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசை கண்டித்து தேனி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் LIC, SBI நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்யும் அதானிக்கு துணை போகும் மோடி அரசை கண்டித்தும், தொடர்ந்து பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்தோர் ஏறாளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

Share this…

CATEGORIES
TAGS