ஒப்பந்த முறை ராணுவ ஆள் எடுப்பு அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம்!!

ஒன்றிய மோடி அரசு தற்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்துள்ள ஓய்வூதியம் இல்லாத, ஒப்பந்த முறையில் ராணுவத்திற்கான ஆள் எடுக்கும் திட்டமான அக்னிபாத் திட்டத்தை கண்டித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா அகில இந்திய அறைகூவலை ஏற்று தஞ்சாவூரில் இன்று மாலை 5மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒருங்கிணைப்பாளர் வீர மோகன் தலைமையில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன் தொடக்கி வைத்து உரையாற்றினார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் காளியப்பன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் ராவணன் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ஆர் .பி. முத்துக்குமரன், சிபிஐஎம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.
முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார் , ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் என்.குருசாமி ,கே.அன்பு, ஞான மாணிக்கம், கோவிந்தராஜ், வி.கரிகாலன், எழுத்தாளர் சாம்பான், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் ஆண்டவர், சீனிவாசன், அம்பல ராஜன், கலைக்கோவன், மகேந்திரன், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி எஸ்.தாமரைச்செல்வன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி எஸ்.மனோகரன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சிபிஐ மாநகரச் செயலாளர் ஆர்.பிரபாகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மோடி அரசு சமுதாயத்தை சீரழிக்கும் அக்னி பாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், நான்காண்டு சேவை முடிந்த பிறகு 25 சதவீதம் பேர் வேலை கிடைத்தது போக. மற்ற 75 சத வீதமானோர் வீதிக்கு வந்தால்என்ன செய்வார்கள், ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை கூலிப்படையாக, ஆர்எஸ்எஸ் மயமாக்கும், கார்ப்பரேட்டுகளுக்கு கூலிபடையாக மாற்றும் அபாயம் உள்ளது, மத்திய மாநில அரசுத்துறைகளில் மற்றும் பொதுத் துறைகளில் காலியாக 50 லட்சத்திற்கும் மேல் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, அந்தப் பணிகளில் தேவைக்கேற்ப காண்ட்ராக்ட் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது,அதே போல ராணுவத்தையும் சீர்குலைத்து, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் ராணுவத்தை ஒப்பந்தமயமாக்கும் காண்ட்ராக்ட் முறை திட்டத்தை மோடி அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.