ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை உயர்த்தி தர வேண்டும் என, கோரிக்கை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து 200 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
