ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பக்கமாக கவிழ்வது போல் செல்லும் அரசு பேருந்து. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலையில் வந்த அரசு பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் மார்க்கத்தில் திருப்பனந்தாள் இருந்து மயிலாடுதுறை அரசு பேருந்தில் குத்தாலம் அருகே அரசு பள்ளிகளுக்கு உள்ள மாணவ மாணவிகள் அதிக அளவில் ஏறினர்.
பேருந்தில் 130க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.அதிக அளவில் பயணிகள் ஏறியதால் பேருந்து ஒரு பக்கம் சாய்வாக கவிழ்வது போல் அபாயகரமாக சென்றது. படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை உணராமல் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
திருப்பனந்தாள்யிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழித்தடத்தில் ஏராளமான பள்ளி கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையினர் மாணவ மாணவிகள் பயணம் செய்யும் காலை மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்லும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறையினர் அறிவுரை வழங்க வேண்டும், பேருந்துகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.