BREAKING NEWS

ஒரே நாளில் 6 அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆரம்பமே அசத்தல்!

ஒரே நாளில் 6 அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆரம்பமே அசத்தல்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தான் எதிர்கொண்ட அனைத்து அணியையும் ஒயிட்வாஷ் செய்தது. ஆரம்பமே இந்திய அணி வீரர்கள் அதிரடியை காட்டத் தொடங்கிவிட்டனர்.

 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணியின் ஏ பிரிவு அணி ஜிம்பாப்வேயுடன் மோதியது.
இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா ‘பி’ அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடியதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா சி அணி தெற்கு சூடானை எதிர்கொண்டதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் ஏ அணி தஜிகிஸ்தானை சந்தித்தது. இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா பி அணி, வேல்ஸ் அணியுடன் மோதியது. இதிலும் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா ‘சி’ அணி ஹாங்காங் அணியை சந்தித்தது. இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )