ஒரே நேரத்தில் க்ளிக் செய்த 3000 புகைப்படக்காரர்கள்: ஆந்திர அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை!

ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜாவை சூழ்ந்து போட்டோ எடுத்த நிகழ்வு, அவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.
ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைப்பதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 3000 போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றிற்கு வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அமைச்சர் ரோஜா, திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார்.
CATEGORIES Uncategorized