BREAKING NEWS

ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என அதிமுக போட்டி போட்டுக் கொண்டிருப்பது தாய் கழகத்திற்கு வேதனையாக இருக்கிறது பாஜகவிடம் அடிமைப்பட்டு கிடக்கும் கட்சியை முதலில் அவர்கள் மீட்க வேண்டும் என கீ.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உண்மையில் எதிர்க்கட்சி யார் என்று போட்டி போடக்கூடிய சூழலில் எதிர்க்கட்சியில் யார் தலைவர் என்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பது உண்மையிலேயே,

வருத்தமளிப்பதாக உள்ளது ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா முக்கோண தலைமையா என்று கேட்பதைவிட அடமானம் வைத்த பொருளை மீட்க வேண்டும் மோடியா லேடியா என்று கேட்ட கட்சி தற்பொழுது மோடி தான் என்ற திசையில் சென்று கொண்டிருப்பதாக தாய் கழகம் வேதனை தெரிவிப்பதாக கூறிய கி வீரமணி தலைமையை முடிவு செய்யும் முன்பு தங்கள் கட்சியை அவர்கள் மீட்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )