ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஏடிஎம் கார்டு மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் விலையில்லா சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிறுவனத்தின் தனி ஏ.டி.எம். கார்டு மூலம் வழங்கும் திட்டத்தை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்.

கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள 600 குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கஓ.என்.ஜி.சி.நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் விலையில்லா சுத்திகரிப்பு குடிநீரை நிறுவனத்தின் தனி ஏ.டி.எம்.கார்டு மூலம் 600 குடும்ப அட்டை தாரர்களுக்கு குடிநீர் எந்திரம் மூலம் வழங்க ரூ, 6 லட்சத்து 35 ஆயிரம் செலவில் குடிநீர் எந்திரம் அமைக்கபட்டு அதன் திறப்பு விழா கொத்தங்குடி ஊராட்சி வேலம்புதுக்குடியில் நடைபெற்றது.
விழாவிற்கு காரைக்கால் ஓ.என்.ஜி.சி.யின் சொத்து மேலாளர் அனுராக் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தம்புமோகன் வரவேற்று பேசினார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஏ.டிஎம்.கார்டு மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இப்பகுதி மக்களுக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சுகாதரமான சுத்திகரிக்கபட்ட குடிநீரை வழங்குகிறது. பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஓ.என்.ஜி.சி.நிறுவனம் இந்த திட்டத்தை தரங்கம்பாடி உள்ளிட்ட கடற்கரை கிராம பகுதியில் பல இடங்களில் அமைத்து தர வேண்டும் என்று பேசினார்.
இத்திட்டம் குறித்து காரைக்கால் ஓ.என்.ஜி.சி. சொத்து மேலாளர் அனுராக் கூறியதாவது.
இத்திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 750 லிட்டர் சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கபடும். ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் தண்ணீரை நாங்கள் அளித்துள்ள எங்களின் ஏ.டி.எம்.கார்டு மூலம் பெற்று கொள்ளலாம். ரூ, 6 லட்சத்து 35 ஆயிரம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது.
தமிழக அரசின் வேளாண்மை திட்டத்தால் ஓ.என்.ஜி.சி.பணிகள் பாதிக்கபட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகள் எந்த இடர்பாடும் தடையும் இல்லாமல் இந்த ஏ.டி.எம்.எந்திரம் தண்ணீர் வழங்கும். அந்த அளவிற்கு நாங்கள் அதை கண்காணித்து கொண்டு இருப்போம். என்று பேசினார்.
அப்போது இத்திட்டத்தை கொண்டு வர பெரும் முயற்சி எடுத்த அப்பகுதியை சேர்ந்த செம்பனார்கோவில் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வினோத்பாண்டியனை கிராம மக்கள் பாராட்டினர். விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சாபு, ஜோஸ், சண்முகவேல் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓ.என்.ஜி.சி.
செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
