BREAKING NEWS

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கடந்த மூன்று மாதங்களாக சரிவர தண்ணீர் வரவில்லை என்றும் மேலும் வாடகைக்கு சுமார் 1500 ரூபாய் முதல் 2000 வரை பணம் செலுத்தி தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி பெண்களும் மற்றும் ஆண்களும் ஒன்று கூடி காலி குடங்களுடன் பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சாலை மறியலால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து வெகுவாக பாதித்து வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன, தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதை ஏற்க மறுத்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என வெகு நேரமாக கோஷங்கள் எழுப்பினர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து மாநகராட்சி குடிநீர் வினியோக அதிகாரியான சீனிவாஸ் மற்றும் பிரபாகர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் ஓரிரு தினங்களில் நிலைமை சரியாகிவிடும் தண்ணீர் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் என வாக்குறுதி அளித்த பிறகு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் கைவிட்டு விலகி சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் அசம்பாவிதம் ஏதும் நடக்க விடாமல் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS