ஓபிஎஸ்,இபிஎஸ் சபாநாயகர் அப்பாவு யாரை அங்கீகரிப்பார்?
தமிழக சட்டமன்றம் வரும் 17ம்தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் யாரை அங்கீகரிப்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை ஆளும் திமுக அரசு தரப்பில் சபையில் வைக்கப்பட உள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு சபையில் எங்கு இருக்கை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
அதிமுக தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். அதிமுக துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தான் என்று இபிஎஸ் தரப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் அப்பாவு ஓபிஎஸை அங்கீகரிப்பார் என கூறப்படுகிறது. ரவீந்திரநாத் எம்.பி .கிடையாது என்று இபிஎஸ் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தபோது அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் சபாநாயகர் ஓபிஎஸ் தரப்பை அங்கீகரிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.