ஓரணியில் தமிழ்நாடு: ஊரீஸ் கல்லூரியில் திமுக துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

வேலூர் ஊரீஸ் கல்லூரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னெடுப்பில் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர மாணவரணி சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வேலூர் மாநகர மாணவரணி அமைப்பாளர் ஆர். அருண் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பி. எம். தேவராஜ் மற்றும் மாநகர துணை அமைப்பாளர்கள் சுகுமார், முத்துக்குமரன், கரிமுல்லா, பிரதீப், மகேஷ், பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாநகர மாணவரணி சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விநியோகித்து திமுகவின் சாதனைகளையும் மாணவர் அணியினர் விளக்கி கூறினர்.
அத்துடன் கல்லூரி மாணவ, மாணவிகளை திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுமாறும் மாணவரணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.