கங்கா செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டய படிப்பில் இணையும் முதலாம் ஆண்டுமாணக்கர்களுக்கான விளக்கு ஏற்றும் விழாகோயம்புத்தூர் வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி புதிய அரங்கத்தில் 6 ஜூலை 2022 அன்று நடைப்பெற்றது. விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி செவிலியர்பயிலும் மாணக்கர்களின் அர்பணிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

தமிழ் தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது, சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார்கள், கங்கா செவிலியர் கல்லூரியின்நிர்வாக அறங்காவலர் திருமதி.ராமா ராஜசேகரன் அவர்கள் வரவேற்புரைநிகழ்த்தினார்கள்,

சிறப்பு அழைப்பாளர்திருமதி ஷெர்லி பிரகாஷ், முதல்வர்(மேற்கு கோட்டை நர்சிங் கல்லூரி, திருச்சூர்) டாக்டர்.எஸ்தர்ஜான் (டீன் மற்றும் கல்லூரிமுதல்வர்) ஆகியோர் என்பதிற்கும் மேற்பட்டமுதலாம்ஆண்டு பிஎஸ்சி செவிலியர் மற்றும் செவிலிய பட்டயபடிப்பு மாணக்கர்களின்கையில்உள்ள விளக்கின் ஒளியை ஏற்றி வைத்தார்கள்.

தாங்கள் ஒருஅர்பணிப்புஉள்ள செவிலியராக கடமையாற்றுவோம் என்றுபேராசிரியைஜெபகுமாரி (துணை முதல்வர்), அவர்கள் கூற மாணக்கர்கள்அதை உறுதிமொழிஎடுத்தார்கள்.
தலைமை விருந்தினர். டாக்டர் நிர்மலா. அ, டீன், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைஅவர்கள் தனது உரையில் ஒவ்வொரு செவிலியரும் தங்கள் தொழிலில் இருக்க வேண்டிய தன்னலமற்ற சேவையை வலியுறுத்தினார். தகவல் தொடர்பு திறன், உணர்ச்சி நிலைத்தன்மை, ஆலோசகர், கல்வியாளர் போன்ற அடிப்படை குணங்கள் இருக்க வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்செவிலியர்கள் தங்களின்திறமைகளை மேம்படுத்த வேண்டும், மேலும் நோயாளியின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

சிறப்பு அழைப்பாளர் திருமதி ஷெர்லி பிரகாஷ்,அவர்கள் பேசும்போது செவிலியர்துறையை தேர்ந்தெடுத்த மாணக்கர்களைப் பாராட்டினார். மாணக்கர்கள்சமூக அக்கறை, ஏழை நோயாளிகளிடத்தில்அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும், செவிலியர் பணியின் முக்கியத்துவத்தையும், தொழில்நுட்பத்தைபயன்படுத்தவும்மற்றும் கற்பிக்கவும், நோயாளியை கவனிப்பதற்கான ஆர்வம், பணிவு, நெறிமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும்வலியுறுத்தினார்.
விழாவில் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் “கை விளக்கு ஏந்திய காரிகை” என்பதை விளக்கும் வகையில் மாணவிஒருவரும், புதுமையான புதியசகாப்தத்தை சித்தரிக்கும் வகையில் “TRIAD TROOPERS”என்றதலைப்பில்ஒருவியக்கத்தக்கமாதிரிகாட்சிப்படுத்தப்பட்டது, இதுஇராணுவம், கடற்படைமற்றும்விமானசெவிலியர்களாகஅவர்களின்தொழிலின்மேம்பட்டபாத்திரத்தைபாராட்டத்தக்கவகையில்தத்ரூபமாக காட்சிப்படுத்தினார்கள்.
முடிவில் டாக்டர். எஸ்தர் ஜான் (டீன் மற்றும் கல்லூரிமுதல்வர்) அவர்கள் நன்றி உரைநிகழ்த்தினார்கள். தேசிய கீதம் இசைக்க விழா நிறைவடைந்தது.
