கஞ்சா போதையில் சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்த புள்ளிங்கோ 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தஞ்சாவூரில், கஞ்சா போதையில் புள்ளிங்கோ சிலர், கடந்த 3ம் தேதி சாலையோர வியாபாரிகளை அடித்து ரவுசு செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரகாஷ் என்ற சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ராஜா(17), மதியழகன் (19), சக்திவேல் (17), பாலச்சந்தர் (18), ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் நகர் பகுதிகளில், கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பள்ளி சிறுவர்கள் முதல் கல்லுாரி இளைஞர்கள் வரை குறி வைத்து கஞ்சா விற்பனை கும்பல் படுஜோராக தொழிலில் கொடிக்காட்டி பறந்து வருகின்றனர். கஞ்சா போதைக்கு அடிமையான புள்ளிங்கோ சிறுவர்கள்,இளைஞர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகாரித்துள்ளது.
இந்த நிலையில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா செல்லும் வழியில் 3ம் தேதி) மாலை சாலையோரத்தில் கடை வைத்திருந்த பாணி புரி கடைக்காரரை அடித்து தாக்கியுள்ளனர். அவர் பயத்தில் அலறி ஓடினார். அதன் பிறகு அங்கிருந்த பழக்கடையில் பழங்களை எடுத்து வியாபாரி மீது வீசி ரகளை செய்தனர். இதனை அப்பகுதியில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அடுத்து 5 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்
