கடக்கம் அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம்.
கடக்கம் அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம்.

தரங்கம்பாடி,மே.20: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே அகர ஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலயம் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

கடக்கம் அகரஆதனூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் 86 ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 6ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.தீமிதி உற்சவத்தை முன்னிட்டு குளக்கரையிலிருந்து மேளம் முழங்க கரக ஊர்வலம் துவங்கியது. 20 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன.

அங்கு தீக்குண்டத்தில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது. பூரண பரம்பரை அறங்காவலர் தம்பி.பாலவேலாயுதம் குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
படவிளக்கம்: பெரம்பூர் அருகே கடக்கம் அகரஆதனூர் கிராமத்தில் புற்றடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் ஏராளமான பக்தர்கள் கலந்துகண்டு தீ மிதித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
