கடலூரில் காவல் ஆய்வாளர் பூரண நலம் பெற வேண்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மனமுருகி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் குருமூர்த்தி என்பவர் நேர்மையுடனும், பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் குற்றவாளி மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும் என காவல் அதிகாரிகள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர் என பெயர் பெற்றவர்.
இந்த நிலையில் ஆய்வாளர் குருமூர்த்தி கடந்த 2 தினங்களுக்கு முன் திடீரென மயங்கி கீழே விழுந்து புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இருவரும் நேரில் சென்று ஆய்வாளர் குருமூர்த்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து மேல் சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் ஆய்வாளர் மீதும் அவர் நேர்மையான பணி மீதும் பற்று கொண்ட துணைக் கண்காணிப்பாளர் பிரபு, உதவி ஆய்வாளர் கதிரவன் மற்றும் பெண் காவலர்கள் உள்பட 100-க்கு மேற்பட்டோர் போலீசார் பூரண நலம் பெற வேண்டி கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சக காவலருக்காக போலீசார் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது