கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை.!

கடலூர் செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (39) த/பெ கோவிந்தன் என்பவர் சென்னையில் வேலை செய்து வந்தார் அப்போது அங்கு மிஸ்பசாந்தி (35) என்பவர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு.
அதன் மூலம் அருள் ஹெலன் கிரேஸ் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அக்குழந்தைக்கு எட்டு வயது ஆகிறது, ஆனால் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை, சிவகுருநாதன் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019-ல் சிவகுருநாதன் சொந்த ஊரான மலையனூருக்கு வந்து விட்டார்.
மிஸ்பசாந்தி மற்றும் அம்மா, மகளோடு சென்னையிலிருந்து அவர்கள் அவ்வப்போது மலையனூர் வந்து சிவகுருநாதனை பார்த்து செல்வது வழக்கம் , கடந்த மூன்று வருடங்களாக இருவருக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்கள்.
கடந்த 27.11.22 தேதி மிஸ்பசாந்தி மற்றும் மகள், அம்மா மூவரும் மலையனூர் சிவகுருநாதன் வீட்டிற்கு வந்து இங்கேயே இருக்கப் போவதாகவும் தனியாக வீடு பார்க்க சொல்லி உள்ளார்கள்.
அவரும் மலையனூரில் தனியாக வீடு பார்த்து கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளார்கள்.
நேற்று 30.11.22 தேதி இரவு 21.00 மணி அளவில் சிவகுருநாதன் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக பார்க்க சென்றுள்ளார் ஆனால் அவர்கள் வீட்டில் இல்லை.
அவர்களை தேடிப் பார்த்துள்ளார், ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும், அவர்களிடம் தொடர்பு கொள்ள செல்போன் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து இன்று 01.12.22 தேதி காலை 07.00 மணி அளவில் வேல்முருகன் த/பெ சாமிதுரை என்பவர் கிணற்றில் மிஸ்பசாந்தி(35), அவரது தாயார் தேபோரால் கல்யாணி (60), மற்றும் அருள் ஹெலன் கிரேஸ் (8) மூவரும் இறந்த நிலையில் மிதந்துள்ளார்கள்.
என்று அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து தகவல் சொன்னதின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
சிவகுருநாதனுக்கு ஏற்கனவே சுமதி என்ற பெண்ணோடு காதல் திருமணமாகி அதில் ஆர்த்தி (17), நந்தினி (8) என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. சுமதி 2016-ல் தவறான நடவடிக்கையால் தூக்கு போட்டு இறந்து விட்டார். என்றும் சிவகுருநாதன் மங்களூரில் உள்ள பர்னிச்சர் கடையில் 2020-ல் இருந்து வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.