கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் இவர் போலி மருத்துவர் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்ததன் பேரில் அங்கு திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அவரது வீட்டில் ஏராளமாக மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து ராமநத்தம் போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
சிறையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியில் வந்த சுரேஷ் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி 32 வயது என்ற பெண்ணிற்கு கருகலைப்பு செய்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனை அடுத்து ராமநத்தம் போலீசார் போலி மருத்துவர் சுரேஷ் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதிகளில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் அதிகரித்து வருவதும் கருகலைப்பில் பெண்கள் உயிரிழப்பதும் தொடர்கதை ஆகி உள்ளதால் அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை வைக்கின்றனர்.
