கடலூர் அருகே திருமணமாகாத இளைஞன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை.!

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேவூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் த/பெ பெரியசாமி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது தாய் தந்தையோடு சென்னை கோயம்பேட்டில் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த குணசேகரன் தனது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
இன்று காலை குணசேகரனின் நண்பர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அப்போது அவர் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி மற்றும் தனிப்பிரிவு காவலர் சதன் ஆகியோர் குணசேகரின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகாத இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.