கடலூர் செங்காட்டு காலனியை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் மெய் வழி சட்ட மையம் – மெய்வழி மக்கள் இயக்கம் வலியுறுத்தல்.

செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள மஞ்சை மைதானம் பகுதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மெய்வழி சட்ட மையம்,
மெய் வழி மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் தலைமையில் கடந்த 30 ஆண்டுகளாக குடிமனை பட்டா வேண்டி தொடர்ந்து போராடிவரும் கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சி செங்காட்டு காலனி ஆதிதிராவிட மக்களுக்கு எஸ்சி/எஸ்டி சிறப்பு கூறு திட்டம் கீழ் மத்திய மாநில அரசு சிறப்பு திட்டங்களின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தை உரிய விலை கொடுத்து வாங்கி,
குடிமனைகளாக பிரித்து இலவச பட்டா வழங்கி காங்கிரிட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும், கடந்த 20.10.2004 அன்று கடலூர் மாவட்ட அரசுகள் சிறப்பு ஆணையின்படி நி.2/43330/2004 படிவம் 11,2,92 ஹெக்டர் கீழ் அழிஞ்சிபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி ஆதி திராவிடர் மக்களுக்கு,
இலவச குடிமனை பட்டா வழங்க அரசு கையகப்படுத்திய நிலத்தின் தனியார் உரிமையாளருக்கு உரிய தொகை செலுத்தாமல் தற்போது வரை கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்தி புதிய அரசு தழில் வெளியீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மெய்வழி சட்ட மையம், மெய் வழி மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், இளம் வழக்கறிஞர்கள்,
சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பெண் ஆளுமைகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும் கடலூர் செங்காட்டு காலனியை தலைமை செயலாளர் இறையன்பு இ.ஆ.ப அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்தனர்.