BREAKING NEWS

கடவுள் நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை: முதல்வர் ஸ்டாலின் குறித்து வைரமுத்து ட்வீட்.

கடவுள் நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை: முதல்வர் ஸ்டாலின் குறித்து வைரமுத்து ட்வீட்.

கடவுள் நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்பதே தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ கடவுள் இல்லை -பெரியார், ஒன்றே குலம், ஒருவனே தேவன் – அண்ணா, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் – கலைஞர்

 

கடவுள் நண்பரும் இல்லை பகைவரும் இல்லை – மு.க.ஸ்டாலின். இது சமரசமன்று; சமன் செய்தல்” என்று தெரிவித்துள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்பு வள்ளலார் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆன்மீகத்துக்கு எதிரான இயக்கம் அல்ல என பேசியிருந்தார். இந்த நிலையில் வைரமுத்து இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )