BREAKING NEWS

கடித்த பாம்புடன் போடி அரசு மருத்துவமனைக்கு வந்த கட்டிட தொழிலாளி

கடித்த பாம்புடன் போடி அரசு மருத்துவமனைக்கு வந்த கட்டிட தொழிலாளி

போடி செய்தியாளர் மு.பிரதீப். 

 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை கடித்த கட்டுவிரியன் பாம்பு. பாம்புடன் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி.

 

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தைச் சேர்ந்த இளைஞர் விவேக் வயது 25 இவர் தேவாரம் பகுதியில் கட்டிட கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார்.

 

இன்று தேவாரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் கட்டிடத்தில் அருகாமையில் உள்ள சிமெண்ட் கல்லை தூக்கும் பொழுது அதில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு சீறிப்பாய்ந்து அவரது வலது கையை கடித்தது.

 

 

அலறி அடித்து கொண்டு ஓடிய விவேக்கை கண்டு அவரைக் கடித்த பாம்பை பிடித்து உடன் வேலை பார்த்த நபர்கள் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

பாம்புடன் சிகிச்சைக்காக வந்த நபர்களைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் சற்று அச்சத்துடன் சிகிச்சை மேற்கொண்டனர்.

 

துரிதமாக செயல்பட்டு விவேக் உடன் வேலை பார்த்த நபர்கள் உரிய நேரத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றதால் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு அவர் உயிர் தப்பினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )