கடும்பனி பொழிவு காரணமாக செங்கல்பட்டில் முகப்பு விளக்கை எரிய விட்ட படி செல்லும் வாகனங்கள்.
செய்தியாளர் செங்கை ஷங்கர்.செங்கல்பட்டு.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கி கடந்து பத்து நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு கடந்த ஓரிருநாளாக தினமும் காலை முதலே ஊட்டி, கொடைக்கானல் போல் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஆனால் இன்று செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. செங்கல்பட்டு புறவழிசாலை, செங்கல்பட்டு – காஞ்சிபுரம் பைபாஸ்சாலை, பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுகளிலும் பனிப்பொழிவு அதிகமாகவே காணப்படுகின்றது.
சென்னை – திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் பனிமூட்டத்தால் சாலை தெரியாமல் முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்கின்றது
சாலை தெரியாத அளவிற்க்கு பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.