BREAKING NEWS

கடைகளில் மிரட்டி பணம் கொள்ளை சம்பவம் அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் உயிரிழப்பு.

கடைகளில் மிரட்டி பணம் கொள்ளை சம்பவம் அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் கரந்தையிலுள்ள கடைகளில் மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் கரந்தை ராஜாராமன் மடத்து தெருவைச் சேர்ந்தவர் ஜி. செந்தில்வேல் (80). கரந்தை கடை வீதியில் மளிகை கடை நடத்தி வந்த இவர் கரந்தை வணிக சங்கப் பொருளாளராகவும் இருந்து வந்தார். இவரது கடைக்கு ஜூன் 9 ஆம் தேதி இரவு வந்த ராஜாராமன் மடத்து தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஹரிஹரன் (30), பூக்குளம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் தினேஷ் (19) பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்த செந்தில்வேலை இருவரும் அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பிச் சென்றனர். இதேபோல, மேலும், 3 கடைகளில் இருவரும் பணம் கேட்டு மிரட்டி 2 பேரை அரிவாளால் வெட்டினர். இதில், மருந்துக் கடையில் ரூ. 2,500 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஹரிஹரன், தினேஷை கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 3 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சையில் இருந்து வந்த செந்தில்வேல் உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )