கடை ஞாயிறை, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, காவிரி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
அரக்கன் ஒருவனால் சக்தி இழந்த சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றார் என்பது ஐதீகம். அந்த வகையில் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையை முன்னிட்டு நடைபெற்ற பழமை வாய்ந்த அரும்பன்ன முலையம்மன் சமேத உக்தவேதீஸ்வரர். ஸ்ரீமன்மதீஸ்வரர். ஆகிய ஆலயங்களில் இருந்து சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம் வெள்ளி மயில்வாகனம் வெள்ளி மூஷிக வாகனம் ஆகியவற்றில் மங்கள வாதியங்கள் ஒலிக்க வீதிஉலாவாக காவிரி கரைக்கு கொண்டுவரப்பட்டன.
அங்கு அஸ்திர தேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு.தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு ஒரே சமயத்தில் மகா தீபாராதனை செய்யப்பட்டது.இதேபோல் வைணவ ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீசெங்கமலத்தாயார் சமேத ஆதிகேசவபெருமாள் காவிரி கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.