கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூபாய் 5000/=, மழைக்கால நிவாரணம் ௹பாய் 2000/= கட்டுமானத் தொழிலாளர்கள், தேனியில் ஆர்ப்பாட்டம்.
தேனியில், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூபாய் 5000/=, மழைக்கால நிவாரணம் ௹பாய் 2000/= வழங்கக்கோரி,
கட்டுமானத் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிப ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில், தேனியில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு, சி டபுள்யூ எப்ஐ மாநிலக் குழஉறுப்பினர் பி.பிச்சைமணி தலைமையில்,
தேனி மாவட்டத் தலைவர் எம்.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஜி.சண்முகம் முன்னிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும்,
36 வது நல வாரிய கூட்ட முடிவை அமலாக்கிடவும், பெண்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்கிடவும், பென்சனை ரூபாய் 3000/= என உயர்த்தி வழங்கிடவும், இயற்கை மரண நிவாரண நிதியாக ரூபாய் இரண்டு லட்சம் வழங்கிடவும்,
எம்சாண்ட், பிசாண்ட் மணலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்திடவும், அரசே விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திடவும், கொரோனா நோய்த் தொற்றில் உயிர் இழந்த கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு காலம் தாழ்த்தாமல்,
நிவாரணம் வழங்கிடவும் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, பெண்கள் உட்பட, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.