கட்டுமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: மதுரை, திண்டுக்கல்லில் 20 இடங்களில் ஐடி ரெய்டு.

முறையாக வருமான வரி செலுத்தாதது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல்லில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பால்சாமியின் மகன்களான அழகர் முருகன், ஜெயக்குமார், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் கிளாட்வே, ஜெயபாரத் மற்றும் அன்னைபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி என்ற பெயர்களில் சொந்தமாக கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். மதுரையில் இந்நிறுவனங்களுக்கு சொந்தமான பத்துக்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
