BREAKING NEWS

கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை துறையின் மூலம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் இன்று உடுமலை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை துறையின் மூலம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் இன்று உடுமலை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அண்ணன் மு.பெ. சாமிநாதன் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின்படி கால்நடை துறையின் மூலம் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் இன்று உடுமலை கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் கடத்தூர் ஊராட்சியை சேர்ந்த 7 பயனாளிகளுக்கு கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கமலவேணி கலையரசு அவர்கள் விலையில்லா ஆடுகள் வழங்கி துவக்கி வைத்தார்கள் இந்நிகழ்வில் கால்நடைத்துறை உதவி இயக்குனர் கால்நடைத்துறை மருத்துவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினரும் கடத்தூர் ஊராட்சிக் கழகச் செயலாளருமான கலையரசு மற்றும் கால்நடைத்துறை அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )