கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ.பேச்சு.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ.பேச்சு.

இறைத்தூதர்
நபிகள் நாயகம் இழிவுப்படுத்தியவர்களை கைது செய்யாத பாசிச பாஜக அரசை கண்டித்து கும்பகோணம் அனைத்து வட்டார ஜமாத் சார்பில் சம்சுதீன்
தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு, வட்டார ஜமா அத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய
ஆர்பாட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, நீலப் புலிகள் இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளும், ஜமாஅத்துல் உலமா சபையின் வட்டார நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இதில் கலந்துக்கொண்ட
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும்
அப்துல் சமர் எம்.எல்.ஏ.கண்டன உரையில் பேசியதாவது;-
பாசிச சனாதான கொள்கையை இந்த மண்ணில் வேறோடு அழித்து ஒழிக்க நாம் அனைவர்களும் ஒன்றுப்பட்டு நிற்கவேண்டிய அவசியத்தை
அதைநோக்கி பயணிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது,
பாசிச பயங்கவாத
செயல்களை ஊக்குவிக்கும்
ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களையும்
ஒற்றுமையோடு
நின்று முறியடிப்போம்.
நபி அவர்களை இழுவுப்படுத்திய பாசிச சக்திகளை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை போராட்டம் தொடரவேண்டும்
அதற்காக மனிதநேய மக்கள் கட்சி துணை நிற்கும் என்று கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு
மதிமுக
மாநில துணை பொதுச்செயலாளர் முருகன், மேயர் சரவணன் துணைமேயர் தமிழழகன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், மற்றும்
ஜமாத்தார்களும், பெண்களும்
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
