கமுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி நரிக்குறவர்களுடன் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நரிக்குறவர் மக்களுடன் பாஜகவினர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை நரிக்குறவ மக்களுடன் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்களை மலைவாழ் இன பட்டியல் இணைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு நன்றி தெரிவித்து தங்களது வீடுகளில் பாஜக கொடியை ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பாஜக ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் போர்ஜி ஒன்றிய விவசாய அணி தலைவர் இயற்கை விவசாயி ராமர் இளைஞரணி தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
