கமுதி அருகே நோய் தாக்கத்திலிருந்து முழு உடல்நலம் ஆரோக்கியம் பெற உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் வினோத வழிபாடு.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் பத்தர்கள் நோய் தாக்கத்திலிருந்து உடல் நலம்பெறவும்,
ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் தங்களது உடல் முழுவதும் சகதி பூசி அழகு வள்ளி அம்மன் அருள் ஆசிபெற பக்தர்கள் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து தங்களது நேர்த்திக்கடனை வேப்பிலையை கையிலேந்தி மேள தாளங்களுடன் ஆடிப்பாடி தங்களது நேர்த்திக்கடன்களை வினோதமான முறையில் நிறைவேற்றினர்.
செங்கப்படை கிராமத்தில் கடந்த வாரம் அருள்மிகு அழகு வள்ளி அம்மன் ஆவணி மாத பொங்கல் முளைப்பாரி திருவிழா காப்புக்கட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான இன்று பால்குடம், அக்னிச்சட்டி, சிலா குத்துதல், பூக்குழி இறங்குதல், அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தங்களுக்கு நோய் தாக்கத்தில் இருந்து.
உடல் நலம் முழு உடல் ஆரோக்கியம் பெற வேண்டி வினோதமான முறையில் தங்களது உடல் முழுவதும் சகதிகளை பூசி மேளதாளங்கள் இசைக்கு ஏற்றார் போல் கைகளில் வேப்பிலையை ஏந்தி ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக அழகு வள்ளி அம்மன் கோவிலுக்கு சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.