கருணாநிதி பிறந்த நாளையொட்டி மோட்டார் சைக்கிள் பந்தயம்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் ஆர்கே ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையில் ஆதிபராசக்தி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் நடந்தது.


இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.


மோட்டார் சைக்கிளில் சீறிப்பாய்ந்த வீரர்கள் புழுதி பறந்த நிலையிலும் மோட்டார் சைக்கிளில் இலக்கை அடைவதற்காக சீறிபாய்ந்தனர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை காண இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கூடியிருந்தனர்.
CATEGORIES திருப்பூர்
