கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜூன் 3ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஜூன் 3ம் தேதி பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர தி.மு.க., சார்பில் தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., நகர செயலாளரும், கோவில்பட்டி நகராட்சி சேர்மனுமான கருணாநிதி தலைமையில். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 18 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார்.பின்னர், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் நகர தி.மு.க., சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, அன்னதானத்தை துவங்கி வைத்தார்.தொடர்ந்து, கோவில்பட்டி பயணியர் விடுதியில், ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று விளையாடிய கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் மற்றும் கார்த்திக் ஆகியோரை பாராட்டி, பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், விவசாய அணி அமைப்பாளர் ராமர்,இளைஞர் அணி செயலாளர் மகேந்திரன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.