BREAKING NEWS

கருத்தரங்கம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கம் உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் எனது குப்பை எனது பொறுப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியை எம் கண்ணகி தலைமை தாங்கினார் நாட்டு நலப்பணித்து அலுவலர் செ சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

 

முதுகலை வேதியியல் ஆசிரியர் ஜெகநாதர் ஆழ்வார் சாமி எனது குப்பை எனது பொறுப்பு எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் மஞ்சள் பையை பயன்படுத்தி மண்ணில் வளத்தை நிலை நிறுத்து பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்ப்போம் நமது கிராமம் தூய்மையான கிராமம் பள்ளி தூய்மை மாணவர் கடமையும் போன்ற பல்வேறு கருத்துக்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.

 

பள்ளி வளாகம் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய பசுமை படை மாணவ மாணவிகளால் தூய்மை செய்யப்பட்டு வருகிறது பள்ளி வளாகத்தின் முன்புறமுள்ள நிழற்குடை மற்றும் ஆய்வகப் பகுதிகள் விளையாட்டு மைதானம் போன்றவை தூய்மை செய்யப்பட்டு வருகிறது தூய்மை பணியினை பள்ளியின் பல்வேறு ஆசிரியர்கள் வழிகாட்டலின் படி மாணவ மாணவிகளும் மேற்கொண்டு வருகின்றனர் முதுகலை கணித ஆசிரியர் வி ரமேஷ் நன்றி கூறினார் பள்ளி நாட்டு நலப்படுத்திட்டம் மற்றும் தேசிய பசுமை படை சார்பாக தொடர்ந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )