BREAKING NEWS

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் 22-03-2024
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்தரத்தை முன்னிட்டு தெய்வத் திருமண பெருவிழா கோயில் நால்வர் அரங்கில் நடைபெற்றது. கரூர் பசுபதீஸ்வரர் சுவாமி, அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி சார்பில் அம்பாள்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மொய் சமர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருமண நிகழ்வை தரிசித்து, மொய் சமர்ப்பித்து, திருமண விருந்தில் பங்கேற்று உணவருந்தினர். தொடர்ந்து, தமிழிசை பாடல்கள், சொற்பொழிவு, பரதநாட்டியம், ஒயிலாட்டம், ஈசன், வள்ளி கும்மி, பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு நடன நிகழ்ச்சி, சுவாமி, அம்மன் திருக்கல்யாண கோலத்தில் திருவீதிஉலா, வாணவேடிக்கை, சிவசக்தி காட்சி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
பேட்டி – ரவி – சிவனடியார்

Share this…

CATEGORIES
TAGS