கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் உளறல்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் 100% வெற்றி வாய்ப்பை பெறப்போகிறார்கள் அதன் தொடர்ச்சியாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கருப்பு பணம் விவகாரத்தில் செந்தில் பாலாஜி தான் பதிக்க வைத்துள்ளார் என தேர்தல் பிரச்சாரத்தில் உளறல்.
கரூர் மாநகராட்சி பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வி வி செந்தில்நாதன் காலை முதலே தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் திரளாக நின்று ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்
பின்னர் பொதுமக்களின் காலில் விழுந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில்நாதன் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் பின்னர்
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் பொதுமக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் கரூர் மாநகரின் இன்றைய பிரச்சாரம் மிக சிறப்பாக அமைந்ததாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை க்கும் பெரிய செல்வாக்கு மிக்க தேர்தல் ஆக இந்த தேர்தல் அமைந்துள்ளது பேசி ஜனநாயகருக்கு கூட்டணி கட்சிகளின் வெற்றி 100% உறுதி செய்யப்பட்டுள்ளது அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தடுமாற்றத்தின் காரணமாக செந்தில்பாலாஜி தான் கருப்பு பணத்தை பறிக்க வைத்துள்ளதாக பிரச்சாரத்தில் உண்மையை உளறி கொட்டிய ஜோதிமணி என பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதன் கூறினார்