கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும்.

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தின் காவிரி உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் இதுதான் தமிழக பா.ஜ.கவின் நிலைப்பாடு பா.ஜ.க விவசாய பிரிவின் மாநில செயலாளர் பூண்டி வெங்கடேசன் வலியுறுத்தல்:
தஞ்சையில் பா.ஜ.க வின் விவசாய பிரிவின் மாநில செயலாளர் பூண்டி வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அதிக அளவில் மகசூல் எடுத்திட தேவையான விதை நெல், உரம் உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றவர்,
கர்நாடக அரசு தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி நீரை தடுத்திடும் வகையில், மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால்
தமிழகத்தின் காவிரி உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமே காவிரி தான் என்பதால், பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும் தமிழக விவசாயிகளின் நலன் தான் முக்கியம் என்றார்.
