கலவை பேருந்து நிலையத்தில் Remove term: திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் திமிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான அசோக், தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் பாலிசுப்பிரமணியன், நகர அவை தலைவர் சனவுல்லா, மாவட்ட பொருளாளர் வெற்றி வீரன், மாவட்ட பிரதிநிதி மகேந்திரன்,
திமிரி ஒன்றி இளைஞரணி துணை அமைப்பாளர் சித்திக் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சேதுரவி, வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஏ.வி. சாரதி, ஆகியோர் சிறப்புரையற்றினார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கலைமணி, மற்றும் திமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட கலர் கலந்து கொண்டனர். முடிவில் திமிரி ஒன்றிய துணைச் செயலாளர் அலெக்சாண்டர், நன்றி கூறினார்.