கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கு விழா.

தஞ்சாவூர்,
கும்பகோணம் வட்டாராம் இன்னம்பூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னை கன்று வீதம் இலவசமாக வழங்கும் விழா இன்னம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கும்பகோணம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் சாரதி கலந்து கொண்டு இலவச தென்னங் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இன்னம்பூர் கிராம பொறுப்பு அலுவலர் சத்யராஜ், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் , தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு மாநில செயலாளர் மகேந்திரன், பகுதி உதவி வேளாண் அலுவலர் துர்கா லட்சுமி, இன்னம்பூர் ஊராட்சி செயலாளர் வீரமணி,மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இன்னம்பூர் கிராமத்தில் உள்ள 300 பண்ணை குடும்பங்களுக்கும்
தென்னங்கன்றுகள் வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கப்பட்டது.
தென்னங் கன்றுகள் 3×3×3 அடி அளவுள்ள குழி வெட்டி நடு முறைகள் பற்றி அனைத்து விவசாயிகளுக்கும் விளக்கமாக எடுத்து கூறப்பட்டது.