கலைஞர் சிலை திறப்பது எப்போது தெரியுமா?
கலைஞர் சிலை திறப்பது எப்போது தெரியுமா?

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் திருவுருவ சிலை நிறுவப்படும் என்று கடந்த மாதம் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மேலும் ஒரு மாத காலத்திற்குள் சிலை வடிவமைக்கப்பட்டு திறக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதைதொடர்ந்து ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் மறைந்த மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை வருகிற 28ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இச்சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
